நெல்லை அருகே பள்ளி மாணவன் தற்கொலை. பேருந்துகளுக்கு தீ வைப்பு.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மகன் சபரி கண்ணன் (15).

இவர், வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

பள்ளியில் மாணவன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுதால் ஆசிரியர்கள் கண்டித்தனர்

மனமுடைந்த மாணவன் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தான்.

ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி நேற்றிரவு உறவினர்கள், மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

நேற்று நள்ளிரவில் மாணவரின் உறவினர்களில் சிலர் தனியார் பள்ளியின் இரண்டு பேருந்துகளை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இதில் அந்த பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *