டூரிஸ்ட் பேமிலி, வெற்றியின் ரகசியம்.

டூரிஸ்ட் ஃபேமிலி, ரொம்ப உருக்கமாக இல்லை. யார் அழும் போதும் நமக்கு அழுகை வரவில்லை. அந்தக் குட்டிப் பையன் இல்லையென்றால் இன்னும் கூட போரடித்திருக்க வாய்ப்பு உண்டு.

இருந்தாலும் இந்த சினிமா ஹிட். சசிகுமாரின் பட வரிசையில் குறிப்பிடத்தகுந்த வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. எப்படி?

ரெட்ரோவுடன் இணைந்து வந்ததால், முதலில் குறைவான தியேட்டர்கள் கிடைக்கப் பெற்று, படம் நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்ற உடன் தியேட்டர்கள் அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

உண்மையில் போதை, வன்முறை, அடிதடி, துப்பாக்கி, சில நேரங்களில் பீரங்கியோடு அலையும் ஹீரோக்களின் படங்களை விடவும் இந்த மாதிரியான மென்மையான நல்லுணர்வு( feel good ) படங்கள் தற்போது அதிக வரவேற்பைப் பெறுகின்றன.

ஓடிடி வந்த பிறகு, பிற மொழிப் படங்கள், அதிலும் குறிப்பாக மலையாளப் படங்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். கொஞ்சம் மெதுவாக நகர்கிற படமாக இருந்தாலும், ஆரம்பித்து அரைமணி நேரம் கழித்துத் தான் கதையே புரிய ஆரம்பிக்கிறது என்றாலும் கூட, அவசரமின்றி படத்தைப் பார்க்கிற பொறுமை வாய்த்திருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலியின் வெற்றி, கோடை விடுமுறை சமயத்தில், தற்செயலாக, ரெட்ரோ mixed response பெற்றதால், ஏதோ திடீரென்று நிகழ்ந்ததல்ல.. அடிப்படையில் நம் ரசனையிலும் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். தமிழ்நாட்டில் இம்மாதிரிப் படங்களின் theatrical success மிகவும் அவசியமானது.

இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. நல்ல சினிமா!
– ரசிகன் குரல்

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *