‘ எம்.ஜி.ஆர், சிவாஜி கிட்டே அடி வாங்கியாச்சி, உன்ன மாதிரி ஆட்கள் கிட்டேயும் அடி வாங்கனுமா ?’
என பாக்யராஜை நம்பியார் கலாய்த்த ஒரு சம்பவம்
வில்லனாக இருந்த நம்பியாரை காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக மாற்றிய பெருமை, பாக்யராஜை சேரும்.
நம்பியாரை தனது தூறல் நின்னு போச்சு படத்தில் நடிக்க வைக்க, அவர் வீட்டுக்கு சென்றுள்ளார், பாக்யராஜ். அப்போது அவரிடம் என்ன விஷயம் என்று நம்பியார் கேட்க, என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட நம்பியார், நான் எம்.ஜி.ஆர், சிவாஜி கிட்டே எல்லாம் அடி வாங்கியாச்சி, இப்போ உன்ன மாதிரி ஆட்களிடமும் அடி வாங்கனுமா ?என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு பாக்யராஜ் கதையை சொல்லி உள்ளார். அதற்கு நம்பியார், பாசிட்டீவான வேடமா? அது எனக்கு செட்டாகாது நீ கௌம்பு’ என்று கூறி விட்டார். ஆனாலும் பாக்யராஜ் அவரை அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
வில்லன் ரோலில் தனக்கென தனி முத்திரை பதித்த நம்பியார் தூறல் நின்னு போச்சு படத்தின் மூலம் குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராகவும் முத்திரை பதித்தார்.