சிரஞ்சீவி –ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ என்ற தெலுங்கு திரைப்படம் 1990-ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி வெளியானது.
சரியாக 35 ஆண்டுகள் கழித்து அதே தினத்தில்
ரீ –ரீலீஸ் ஆகிறது, அந்த படம்.
90 -களில் ஸ்ரீதேவி இந்தி படங்களில் பிசியாக இருந்தார். தனது கேரக்டர், சம்பளம், ஹீரோ ஆகிய மூன்றையும் மனதில் கொண்டு,அவ்வப்போது சில தெலுங்குப் படங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார்.
அதில் ஒரு படம் –இது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்த படத்தை ராகவேந்திரராவ் இயக்கினார்.
இசை- இளையராஜா.
இந்தப் படத்தில் இந்தி நடிகர் அம்ரிஷ் பூரி, கன்னட நடிகர் பிரபாகர், ராமி ரெட்டி, தணிகலபரணி, பிரமானந்தம், ஜனகராஜ், ஆர்.எஸ்.சிவாஜி, கிரேஸி மோகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
—