இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்மபூஷன், பத்மஸ்ரீ, உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
கலை ,விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனைகளை படைத்த, நபர்களுக:கு இந்த விருதுககள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது நடிகரும்,கார் பந்தய விளையாட்டு வீரருமான அஜித்துக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.
அஜித்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார்.
அஜித் விருது வாங்கும்போது அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள், அந்த இடத்தில் இருந்தனர்.
அப்போது ஆனந்தமாக கைத்தட்டி மகிழ்ச்சியுடன் இருந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் தங்கள் வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
—