தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரோஜா, ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘செம்பருத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ரஜினிகாந்த்,அஜித், கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.இப்போது சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டுள்ளார்.ஜெகன் மோகன் அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார்
இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அண்மையில் அளித்த பேட்டியில் ரோஜா சொன்ன தகவல் இது :
M
“நானும் எனது கணவரும் காதலித்த நேரத்தில் 24 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அந்த குழந்தைகளை உலகம் போற்றும் வகையில், வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது.
ஆனால், அப்போது எனக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர் சொன்னதால் உடைந்து போனேன். கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை பரிசாக கொடுத்தார். நம்மையும் மீறி ஒரு சக்தி இருப்பதை அப்போது தான், நானும், என் கணவரும் உணர்ந்தோம்” என்று நெகிழ்ந்தார், ரோஜா.
—