‘இளையதளபதி’ விஜய் நடித்த ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படங்கள் விரைவில் ரீ-ரிலீஸ் ஆகின்றன.
கடந்த ஆண்டு புதிய படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸில் வசூலை அள்ளிய படம் ‘கில்லி’.
படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். ரீ-ரிலீஸ் விநியோக உரிமையை பெற்று, வெளியிட்டார் சக்திவேலன்.
தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தற்போது ‘கில்லி’ படத்தைத் தொடர்ந்து, ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ ஆகிய படங்களையும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக அதன் தயாரிபாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களுமே விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமானவை.
‘குஷி’ படத்தின் பாடல்கள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதே போல் ‘சிவகாசி’ படமும் கமர்ஷியலாக பெரிய வெற்றியை விஜய்க்கு பெற்றுக் கொடுத்தது.
—