இளையதளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தில் ஹனுமன்கின்த் என்ற பிரபக பாடகர் ராப் பாடல் ஒன்றை பாடி இருக்கிறார்.இந்திய சினிமா உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் விஜய்யின் ‘ஜன நாயகன்’.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படம் அரசியல் ஆக்ஷன் திரில்லர் களத்தில் உருவாகி வருகிறது.
விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜன நாயகன் குறித்து ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது.
புகழ்பெற்ற ராப் பாடகரும், பாடலாசிரியருமான ஹனுமன்கின்த், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் ஒரு அதிரடியான ராப் பாடலைப் பாடியுள்ளார்.
இதனை அவரே தெரிவித்துள்ளார்.
“நான் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் தளபதி விஜய்க்காக ஒரு அட்டகாசமான ராப் பாடலைப் பாடியுள்ளேன். அனிருத் ரவிச்சந்தர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்,” என்று ஹனுமன்கின்த் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாடல் குறித்து வேறு தகவல்களை அவர் வெளியிட மறுத்து விட்டார்.
—-