அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய், கடைசியாக நடித்து வரும் படம் ‘ஜன நாயகன்’.ஹெச். வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மாமிதா பைஜூ, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளது.
இந்த படத்தில் நடிகை ரேவதியும் இணைகிறார். அவர் விஜயின் தாயாராக நடிக்கிறார். ரேவதி இதற்கு முன்பு 2002 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் விஜய்க்கு சகோதரியாக நடித்தார்.
23 ஆண்டுகளுக்கு பிறகு விஜயுடன் ரேவதி மீண்டும் இணைந்திருப்பது, ரசிகர்கள் ,மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழில் அறிமுகமான படம்’ தமிழன்’. என்பது குறிப்பிடத்தக்கது.