2005 – ஆம் ஆண்டு இளையதளபதி விஜய் நடித்த சச்சின் ரிலீஸ் ஆனது.
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜயுடன் ஜெனிலியா, சந்தானம், வடிவேலு, பிபாஷா பாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படம் கடந்த 18 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்பட்டது.
ரீ- ரிலீசிலும் சச்சின் கல்லா கட்டியது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.
இதில் தயாரிப்பாளர் தாணு பேசும்போது கூறிய தகவல்:
,
, “‘திருப்பாச்சி’, ‘மதுர’ போன்ற அதிரடி திரைப்படங்களில் கவனம் செலுத்திய விஜயிடம் இயக்குநர் ஜான் மகேந்திரன் சொன்ன கதைதான் ‘சச்சின்’. ஒன்றரை மணி நேரம் கதை கேட்டுள்ளார்.
பிறகு ‘தளபதி’ விஜய்யிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, ‘கதை மிகவும் பிடித்திருக்கிறது; கண்டிப்பாக பண்ணலாமென்று’ கூறினார்.
உலகமெங்கும் 2005- ஆம் ஆண்டு ஏப்ரல் 14 -ஆம் தேதி வெளியிட்டேன். திரைப்படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களும் நல்ல வசூல் சாதனை செய்ததாக கூறினார்கள். 200 நாட்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
முதல் ரிலீசைவிட, இப்போது சச்சின் 10 மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது, என்கிறார், தாணு.
—