ரஜினியின் ‘வேட்டையன் ‘,விஜய்யின் ‘கோட்’ ஆகிய
படங்களை விட ,அஜித்தின் ‘ குட் பேட் அக்லி’ முதல் நாளில் வசூலை அள்ளியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித், திரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பட்டையை கிளப்புகிறது.இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
இந்த படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.28.5 கோடி வசூல் செய்துள்ளது.இது சாதனையாக கருதப்படுகிறது.
முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில், குட் பேட் அக்லி திரைப்படம், விஜயின்’ கோட்’, ரஜினிகாந்தின் வேட்டையன். சூர்யாவின் கங்குவா ஆகியவற்றை விட பெரிய வசூலை அள்ளி உள்ளது.
—