‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலகிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கூலி’ படத்தை முடித்துள்ள ரஜினிகாந்த் இப்போது ‘ஜெயிலர் -2 ‘படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்
இந்த படத்தை நெல்சன் டைரக்டு செய்கிறார்.
‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார் ரஜினி.இதில் முதல் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தவிர்த்து வேறு சில முக்கிய கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறார் நெல்சன்.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார். ரஜினி – சிவராஜ்குமார் காட்சிகள் முதல் பாகத்தில் பேசப்பட்டது போல், இதில் ரஜினி – பாலகிருஷ்ணா காட்சிகள் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.
—