மணிரத்னம் டைரக்ட் செய்யும் அடுத்த படத்திலும் சிம்பு நாயகனாக நடிக்க உள்ளார்.
.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அபிராமி, திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’.
அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை பல்வேறு மொழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து காதல் கதையொன்றை மணிரத்னம் இயக்கவிருப்பதாக தகவல் பரவியது.
இதனை மணிரத்னம் மறுத்திருந்தார்.
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளார்..
‘செக்க சிவந்த வானம்’ படத்திலேயே மணிரத்னம் – சிம்பு கூட்டணி இணைந்து பணிபுரிந்திருக்கிறது. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் தனி நாயகனாக சிம்பு நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.