திருப்பூர்- பெண் காவலர் ஒருவரின் சமயோசித செயலுக்கு பாராட்டு குவிந்து உள்ளது.
திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டி மையத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் ஆடையில் அதிக பட்டன்கள் இருப்பதாக கூறி தேர்வு எழுதுவதற்கு பாதுகாவலர்கள் மறுத்து உள்ளனர்.
இதனால் அந்தப் பெண் கண்கலங்கியபடி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து உள்ளார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் அந்த மாணவியை கடைக்கு அழைத்துச் சென்று வேறு ஆடை வாங்கி கொடுத்து தேர்வு எழுத அனுப்பி வைத்தார்
இதனால் பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.