பெங்களூர் ரசிகர்கள் ஓசூரில் முன்பதிவு.

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைப் திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை பார்க்க கர்நாடக ரசிகர்கள் ஒசூரில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் இருந்து பிரிந்தது தான் கன்னடம் என்று கூறிய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடகாவில் தக் லைப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக ரசிகர்கள் பலரும் ஒசூரில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

தெனாலி படத்திற்கு பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் கமல்ஹாசன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *