பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி உள்ளிடோர் நடித்த படம் ‘மெய்யழகன்’.
இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஓடிடியில் வெளியாகி பரவலாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் பிரேம்குமாருக்கு நடிகர் சூர்யா வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை பரிசளித்துள்ளார்.
இதுகுறித்து பிரேம்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“மஹிந்திரா தார் எனக்கு எப்போதும் ஒரு கனவு வாகனமாக இருந்தது.
வெள்ளை நிறத்தில் தார் ராக்ஸ் AX 5L 4×4 வேரியண்ட்டை நான் விரும்பினேன். நேற்று முன்தினம் சூர்யா அண்ணன் எனக்கு ஒரு வெள்ளை தார் ராக்ஸ் AX5L 4×4-ன் புகைப்படத்தை அனுப்பினார், அதில் ‘அது வந்துவிட்டது’ என்ற குறுஞ்செய்தியும் இருந்தது.
இப்போ இதை வாங்க என்கிட்ட காசு இல்ல’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, ‘பிரேம், இது சூர்யா சார் உங்களுக்குக் கொடுத்த பரிசு’ என்றார். நான் வாயடைத்துப் போனேன்.
லட்சுமி இல்லத்துக்கு அழைக்கப்பட்டேன். கதவுகள் திறந்ததும், என்னுடன் அதன் நீண்ட பயணத்தைத் தொடங்க ஒரு கம்பீரமான வெள்ளை தார் ராக்ஸ் AX 5L 4×4 காரும் காத்திருந்தது தெரிந்தது. பக்கவாட்டில் என் அன்பான மெய்யழகன் கார்த்தி நின்று கொண்டிருந்தார்.
அவர் என் கனவுகளைத் திறக்க சாவியை ஒப்படைத்தார். நான் முற்றிலும் நம்ப முடியாமல் நின்றேன். நாங்கள் ஒரு சிறிய ரைட் சென்றோம். பின்னர் நான் தார் காரை என் அலுவலகத்திற்கு கொண்டு வந்தேன். இரண்டு நாட்கள்தான் ஆகிறது, ஆனாலும் நான் குறைந்தது 50 கி.மீ. ஓட்டிவிட்டேன். இது இன்னும் ஒரு கனவு போல உணர்கிறேன்’என்று .பிரேம்குமார் தெரிவித்துள்ளார்