மலையாள நடிகை பாவனா நேரடியாக தமிழில் நடித்த ‘The Door’ படம் அண்மையில் வெளியானது. ஒரு படத்தை எப்படியாவது எடுத்து முடித்துவிட்டு ஒரு வித்தியாசமான டைட்டில், ஒரு வித்தியாசமான போஸ்டர் வெளியிட்டால் போதும். முதல் நாளிலேயே போட்ட முதலீட்டை எடுத்து விடலாம் என்ற தைரியத்தில் எடுக்கப்பட்ட படம்.
ஏனென்றால் படம் ரிலீஸ் ஆகி கதை தெரிந்துவிட்டால் இரண்டாவது நாள் யாரும் படத்துக்கு வர மாட்டார்கள் என்பது இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
‘ஒரு விதவையின் இடத்தில் ஃபிளாட் கட்ட 3 பேர் அதை விலைக்கு கேட்க, அந்த விதவை கொடுக்க மறுக்க அவரை கொலை செய்கிறார்கள். இந்த விதவை பெண் பேயாக வந்து 3 பேரையும் பழி வாங்குகிறார்’.
மொத்த கதையும் இவ்வளவு தான். ஒரு திகில் இல்லை, ஒரு ட்விஸ்ட் இல்லை, தரமான காட்சிகள் இல்லை, சிறப்பான நடிகர்கள் இல்லை, மொத்தத்தில் இது படமே இல்லை.
படத்தை பார்த்திட்டு வெளியே வந்தவர்களிடம் படத்தோட தலைப்பு ‘Door’-க்கும் கதைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என ஒருவர் கூட சொல்லவில்லை.
ஏன் எனில் படத்தில் ஒரு கதவைக் கூட பார்க்க முடியாது. அது தொடர்பான காட்சிகளும் இல்லை.
படம் 2.20 மணி நேரம் ஓடுகிறது. நீங்க டைரக்ட்டா forward செய்து கடைசி 20 நிமிஷங்கள் மட்டும் பார்த்தாலும் கதை ஈஸியாக புரிந்திடும். பின்னாடி போய் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.
சரி, இப்படி ஒரு கதையை தேர்வு செஞ்சு இயக்குனரும் நடிகை பாவனாவும் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திட்டாங்களேன்னு யாரும் ஃபீல் பண்ண வேண்டாம்.
ஏன்னா, நடிகை பாவனாவின் கணவர் தான் தயாரிப்பாளர். பாவனாவின் அண்ணன் தான் இயக்குனர். ஆக, இப்படம் பெரிய நஷ்டத்தை சந்திச்சதுக்கு இவங்க யார் மேலையும் பழி சுமத்த முடியாது.