‘அல்டிமேட் ஸ்டார்’அஜித், ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்பவர்.
ஒன்று – சினிமா
மற்றொன்று – ரேஸ்.
தான் சினிமாவுக்கு வந்தது குறித்து அண்மையில் அஜித் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதன் விவரம் :
“நான் ஒரு விபத்து நடிகன். எனக்கு ஆரம்பத்தில் நடிப்பில் எந்தவிதமான ஆர்வமும் கிடையாது நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன். ஒரு பத்திரிகையாளர் என்னிடம் ஏன் நடிக்க வந்தீர்கள் என்று கேட்டார்.
, ‘எனக்கு நிறைய கடன்கள் இருந்தன- ஓரிரு படங்களில் நடித்து அந்தக் கடன்களை அடைக்கலாம் என்ற எண்ணத்தில் வந்தேன்’ என்று அவரிடம் கூறினேன்.
உண்மையும் அதுதானே?
நான் புகழ் அல்லது பிரபலத்தை விரும்பியெல்லாம் சினிமாவுக்கு வரவில்லை. எனது கடன்களை அடைக்க பணம் தேவைப்பட்டது. எனது ஆரம்பகால படங்களைப் பார்த்தால், நான் ஒரு மோசமான நடிகர் என்பது தெரியும்’ என்று அஜித் வெள்ளந்தியாக சொன்னார்.
. இந்திய சினிமாவுக்கு அஜித் ,ஆற்றிய பங்களிப்பிற்காக , அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அண்மையில் பத்ம பூஷன் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
—