‘இளையதளபதி’ விஜய் ஹீரோவாக நடிக்க
‘கலைப்புலி’தாணு தயாரிப்பில் உருவான படம் ‘சச்சின்’. கடந்த 2005 ஆண்டு வெளியானது’.
சச்சின் வெளிவந்த அதே நாளில்தான், ரஜினியின் சந்திரமுகியும்,
கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ரிலீஸ் ஆனது.
சந்திரமுகி ஒரு ஆண்டு ஓடியது. மும்பை எக்ஸ்பிரஸ் பெயிலியர்.சச்சின் ஆவரேஜ்.
இப்போது ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.வசூலும் குவித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தாணு தயாரிப்பில் விஜய் நடித்த ‘தெறி’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது.
இதனை தாணுவே தெரிவித்திருக்கிறார்.
விஜய் – அட்லி கூட்டணியில் உருவான படம்
‘தெறி’. 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது. மாபெரும் வரவேற்பு பெற்றது.இதன் தயாரிப்பு செலவில் இருந்து இரண்டு மடங்கு தாணுவுக்கு லாபம் கிடைத்தது.
—