துணை முதல்வர் படத்தில் சிம்பு.

தெலுங்கு சினிமா உலகில் , தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பவன் கல்யாண். அவர்கள் ‘சக்தி’யை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனசேனா எனும் கட்சியை ஆரம்பித்தார்.

இப்போது ,அவர்-ஆந்திர மாநில துணை முதலமைச்சராக இருக்கிறார்.உயர் பதவி கிடைத்ததால், கொஞ்சகாலம் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தார்.

பவன், நடிப்பில் உருவான பல படங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன.தயாரிப்பாளர்கள் நலன் கருதி அந்த படங்களை தூசி தட்டி மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
அதில் ஒரு படம் ‘THEY CALL ME –OG’.இந்த படத்தில் பவன் கல்யாண் கேங்ஸ்டராக நடிக்கிறார்.

மும்பை- கதை களம்.இந்த படத்துக்கு பவன், தவிர,மற்ற நடிகர்- நடிகைகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே சூட் செய்யப்பட்டு விட்டன. பவன் தொடர்பான காட்சிகள் மட்டும் ஒரு வாரமாக படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் பவன் கல்யாணுக்காக, நம்ம ஊர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.இந்த தகவலை அவரே தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் ‘தக்லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய சிம்பு, ‘ பவன் கல்யாண் காருக்கு ,ஒரு பாடலாவ்து பாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது.’OG’ படத்தில் அந்த கனவு நனவாகி இருக்கிறது.
தமன் இசையில்,பவன் காருக்கு ஒரு பாடலை பாடியுள்ளேன்’ என பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அறிவித்தார், சிம்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *