தக்லைப் படத்தில் 8 இயக்குநரகள்.

தமிழ் சினிமாவில், கடந்த 2009-ம் ஆண்டு வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தில் 10 இயக்குனர்கள் நடித்திருந்தனர்.
அதன்பிறகு சமீபத்தில் வெளியான ட்ரான் படத்தில் 5 இயக்குனர்கள் நடித்திருந்த நிலையில், கமல்ஹாசனின் ‘தக் லைப்’ படத்தில் 8 இயக்குனர்கள் நடித்துள்ளனர் .

அவர்கள் யார்? யார் . ?

கமல்ஹாசன்.

உலக நாயகன் கமல்,சேச்சி 420 என்ற இந்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து ஹேராம் என்ற படத்தை இந்தி மற்றும் தமிழில் இயக்கினார். அதன் பிறகு விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

சிம்பு.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதல் அழிவதில்லை மூலம் ஹீரோ ஆனார்.
வல்லவன் படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார், சிம்பு

நாசர்.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான நாசர், அவதாரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.அடுத்து தேவதை, மாயன், பாப்கார்ன், ஆகிய படங்களை இயக்கியிருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு வெளியான, சன் சன் தாத்தா என்ற படம் நாசர் இயக்கிய கடைசி படம்.

ஜோஜூ ஜார்ஜ்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜோஜூ ஜார்ஜ், ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற பனி என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.

பாபுராஜ்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பாபுராஜ், கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பிளாக் தல்யா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு, மனுஷ்யமிர்கம், பிளாக் காபி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தனிகெல்லா பரணி.

தெலுங்கு நடிகரான தனிகெல்லா பரணி , வீட்ல விஷேஷங்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், தெலுங்கில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான மிதுனம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

மகேஷ் மஞ்ச்ரேக்கர்.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் 2013-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர், 30 படங்களை இயக்கியுள்ளார். தற்போது, ஏக் ராதா ஏக் மீரா, நிரவாதி ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

சின்னி ஜெயந்த்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் .
பல படங்களில் முத்திரை பதித்தவர்.
சின்னி ஜெயந்த், உனக்காக மட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கானல் நீர், நீயே என் காதலி ஆகிய படங்களையும் இயக்கியிருந்தார்.
* *

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *