தந்தை கமல்ஹாசன் போலவே அவரது மகள் ஸ்ருதி ஹாசன் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நல்ல பாடகி.
ஏ.ஆர். என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள திரில்லர் படம் ‘லெவன்’,
இந்த படத்தில் டி. இமான் இசையில் நான்கு வித்தியாசமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தின் தமிழ் பதிப்பில் இடம் பெறும் ஆங்கிலப்பாடல் ஒன்றை, ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.
பிற பாடல்களை ஆண்ட்ரியா, மனோ, ஜோனிடா காந்தி உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.
‘லெவன்’ திரைப்படம் அடுத்த மாதம் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விரைவில் பாடல்கள் வெளியிடப்படுகின்றன.
—