சில்க் ஸ்மிதாவின் கொஞ்சும் குரல் யாருடையது ?

கடந்த 1980- களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவுக்கு படங்களில் டப்பிங் குரல் கொடுத்தவர், முன்னணி நடிகரின் அக்கா என்பது பலருக்கு தெரியாத விஷயம்.

மலையாள படங்களில் அறிமுகமான கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா, வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர்.

ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்த இவர், ரஜினி,கமல், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில், கவர்ச்சி நடனம் ஆடியவர்.
அந்த கால கட்டத்தில் இளையராஜாவுக்கு இருந்த மவுசு, ஸ்மிதாவுக்கும் இருந்தது.

தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் குத்தாட்டம் போட்டுள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு தனது 35-வது வயதில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டார். சில்க் ஸ்மிதாவுக்கு தமிழில் குரல் கொடுத்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அவர் பெயர் ஹேமமாலினி.நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் அக்கா.

நடிகராக இருந்தாலும், ஆரம்பத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஒரு டப்பிங் கலைஞராக இருந்துள்ளார். அவரை போலவே அவரது சகோதரி ஹேமா மாலினியும் ஒரு டப்பிங் கலைஞர் தான்.
தமிழ் சினிமாவில், 1976 ஆம் ஆண்டு முதல், பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
சிவக்குமார் நடிப்பில் வெளியான சிட்டுக்குருவி என்ற படத்தில் தான் முதல்முறையாக டப்பிங் பேச ஆரம்பித்தார், ஹேமமாலினி.

பாரதிராஜா இயக்கத்தில், பாக்யராஜ் நாயகனாக அறிமுகமாக புதிய வார்ப்புகள் படம் தான் இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடித்த ரதிக்கு , ஹேமாதான் டப்பிங்’ .

அதன்பிறகு, என் ராசாவின் மனசிலே படத்தில், மீனாவுக்கும், பின்னர் பல முன்னணி நடிகைகளுக்கும் டப்பிங் கொடுத்துள்ள ஹேமா மாலினி, சில்க் ஸ்மிதா நடித்த பெரும்பாலான தமிழ் படத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *