‘தக் லைஃப்’ படம் வெளியாக ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் கமலை பேட்டி எடுக்க சென்னைக்கு வந்துள்ளனர்.
அப்போது கமல், ‘தக் லைஃப்’ படத்தில் நடித்த சிம்பு, அசோக் செல்வன், அபிராமி, திரிஷா ஆகியோரையும் பேட்டி கொடுக்கும்படி கூறி உள்ளார்.
.
அதேபோல் நெட்பிளிக்சிடமும் நான் மட்டும் பேட்டி தரமாட்டேன். மற்ற கலைஞர்களும் பேட்டி தருவார்கள் என கறாராக கூறிவிட்டாராம்.
‘தக் லைஃப்’ என் படம் மட்டும் கிடையாது, எங்களுடைய படம். எனவே அனைவரும் புரோமோஷனில் கலந்துகொள்ளவேண்டும் என கமல் அதிரடியாக கூறியுள்ளார்.