‘அல்டிமேட்ஸ்டார்’ அஜித்குமார் நடித்த ‘விடா முயற்சி’ சொதப்பியது.
எனினும் அவர் நடிப்பில் கடந்த மாதம் 10-ஆம் தேதி வெளியான திரைப்படமான “குட் பேட் அக்லி” அவர் பெயரை காப்பாற்றியது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
விமர்சனங்கள் கலவையாக இருந்தது. வசூல் ரீதியாக இந்தப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. வெளியான குறுகிய காலத்திலேயே, உலகம் முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய , ‘குட் பேட் அக்லி’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளது.
வரும் 8 ஆம் தேதி முதல் நெட்ஃபிக்ஸ் சந்தாதாரர்கள் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை வீட்டில் இருந்தபடியே பார்த்து கொண்டாடலாம்.
தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.
, அஜித், ஓடிடி தளத்திலும் அதகளம்செய்வாரா? என பொருத்திருந்து பார்ப்போம்.
–