முன்னணி நடிகை சமந்தா.தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களிள் நடித்து வருகிறார்.
2023 ஆம் ஆண்டு “திரலாலா மூவிங் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சமந்தா, அந்த நிறுவனத்தின் மூலம் ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில், விசாகப்பட்டினத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சமந்தா மேடையில் கண்கலங்கினார். இதற்கு முன்பும் பல மேடைகளில் இதேபோல் சமந்தா கண்கள் கலங்கிய காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன.
அடிக்கடி இவ்வாறு நடப்பது ஏன்? என்பதற்கு சமந்தா விளக்கமளித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா வெளியிட்ட பதிவு இது:
நான் கண்கலங்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. நான் ஏற்கனவே பல இடத்தில் கூறியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் கூறுகிறேன், என் கண்கள் மிகவும் சென்சிட்டிவானது.
, அடிக்கடி நான் மேடையில் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோஷனல் கிடையாது. பிரகாசமான விளக்குகளை பார்க்கும்போது என் கண்கள் கூசுவதால், இயற்கையாகவே எனக்கு கண்ணீர் வருகிறது. அதனாலே நான் அடிக்கடி கண்களை துடைக்கிறேன். நான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு அழவில்லை’ என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சமந்தா.
—