காலம் முழுவதும் நான் நேர்மையுடன் கடின உழைப்புடன் யாருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல் நல்லதை மட்டுமே செய்து கொண்டிருந்தேன். ஆனால் வாழ்க்கை என்னை சோதித்து கொண்டே இருந்தது.
என்றாவது ஒரு நாள் மாற்றம் நிகழும் நல்ல எதிர்காலம் உருவாகும் என்று காத்திருந்தேன். ஆனால் காலங்கள் ஓடியதே தவிர எந்த மாற்றமும் அதிசயமும் ஒரு நல்லதும் என் வாழ்க்கையில் நடக்கவில்லை.
மீண்டும் மீண்டும் விடா முயற்சியுடன் வாழ்வின் எல்லா கதவுகளையும் பலமாக தட்டிக் கொண்டே இருந்தேன். ஆனால் விதி அத்தனையையும் எனக்கு நிராகரித்து கொண்ட இருந்தது.
ஆனால் ஒரு நாள் அந்த மேஜிக் நிகழ்ந்தது, காரணம் நானோ எனக்கு மந்திரவாதி ஆனதால்.
Yes…
One day that magic happened!
When I became a magician myself.
அமேசான் பிரைமில் 5 எபிசோட் கொண்ட Sapne vs Everyone சீரீஸில் வரும் ஒரு பவர்ஃபுல் வசனம். மலோ டிராமா ரொம்பவே பொறுமைய சோதித்து அது பாட்டிற்கு நிதானமாக தான் போனது. எல்லோருக்குமான சீரீஸ் இது இல்லை.
குறிப்பிட்ட அந்த வசனம் சாதரணமாக தெரிந்தாலும் ஒரு பவர்ஃபுல் life changing dialogue.
நான் நேர்மையாக தான் இருக்கேன் கடினமாக உழைக்கிறேன் ஆனால் என்ன தான் எல்லாரும் ஏமாத்தறாங்க இளிச்சவாயனா மிதிக்கிறாங்க. ஒரு முன்னேற்றமும் இல்லாமல் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறேன். கடவுள் ஏன் என்னை மட்டும் இப்படி சோதிகக்கிறார் என்று தெரியவில்லை என புலம்பும் நிறைய பேர்கள்? நிறைய பேர்கள் என்ன அநேகம் பேர்களை நாம் சந்தித்து இருப்போம்.
ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இவர்கள் அனைவரும் மறந்திருப்பார்கள் அது
One day that magic will happen
Until you became a magician Yourself.
Yes…..
உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அதிசயம் மாற்றம் மிராக்கிள்கள் நடக்க வேண்டும் என்றால் அதை எதிர்பார்த்து காத்திராமல் அதை உருவாக்கும் மந்திரவாதியாக நீங்கள் மாறினால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து வெற்றிகளும் உங்கள் வாழ்க்கையில் நிகழும்.