‘ரேஸ்’ பிரியரான அல்டிமேட் ஸ்டார் அஜித், கார் பந்தய வெற்றிக்காக 8 மாதத்தில் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
இது குறித்து அஜித் அளித்துள்ள பேட்டியின் விபரம்:.
‘’கார் பந்தயத்தில் பங்கேற்க எனக்கு நிறைய உடற்தகுதி தேவை. எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்தேன்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது எடையை குறைக்க தொடங்கினேன். உணவில் கட்டுப்பாடு, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டேன்.
நான் ஒரு டீடோட்டலராகவும் வெஜிடேரியனாகவும் மாறிவிட்டேன். பந்தயத்துக்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். அதை நான் தொடர்ந்து செய்வேன்.
பந்தயத்துக்காக படப்பிடிப்புகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டேன்-. கார் பந்தயத்துக்காகவே எனது உடற்தகுதியை நான் பராமரித்து வருகிறேன்” என்று அஜித் தெரிவித்துள்ளார்.
—