‘அல்டிமேட்ஸ்டார்’ அஜித், ஒரே நேரத்தில் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ஆகிய இரு படங்களில் நடித்து முடித்து விட்டு, சில மாதங்களுக்கு முன், கார் ரேசில் பங்கேற்க வெளிநாடுகளுக்கு பறந்து போனார். முதலில் ரிலீஸ் ஆன விடாமுயற்சி, தோல்வி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இரண்டு மாதங்களில் வெளியான “குட் பேட் அக்லி”.
ரசிகர்களை கவர்ந்தது.
விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூல் ரீதியாக இந்தப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
கார் பந்தயங்களில் பிசியாக இருப்பதால், அஜித் எப்போது மீண்டும் நடிப்பார் என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்து அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு அஜித் அளித்த பேட்டியில்,‘ரேசை ஓரளவு முடித்து விட்டு நவம்பர் மாதம் முதல் மீண்டும் நடிக்க போகிறேன் –அந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் ஆகும்’ என தெரிவித்துள்ளார்.