“தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல்” – விஜய்.
சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும்; வேடிக்கை பார்க்க வெளியே வராது; சிங்கம் கர்ஜித்தால் 8 கி.மீ. தூரத்துக்கு அதிரும் – தவெக தலைவர் விஜய்.
ஷூட்டிங்கில் வந்து ஆட்சியை பிடிக்க முடியாது என்றனர்; அதற்கு பலரை எடுத்துக்காட்டாகவும் கூறினர்; அதேபோல விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாகாது என்றனர்.
இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டுமல்ல… மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் இருக்கும்- தவெக தலைவர் விஜய்.
“நம்முடைய ஒரே கொள்கை எதிரி பாஜக நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக.”
“ஒரு காலம் வரும்..
என் கடமை வரும்.. இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்றும் மாநாட்டில் விஜய் பேச்சு.