மறைந்த முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர்.ராணுவத்தில்
சேருவதற்கு ஆசைப்பட்டுள்ளார்.இதனை அவரே தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் ராணுவத்துக்கு
ஆள் சேர்ப்பு நடந்தது. .
அந்த நிகழ்ச்சியில் அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பேசியதன் ஒரு பகுதி:
,
எனது நீண்ட கால ஆசை, பல வருட எண்ணம் இப்போது நிறைவேறுகிறது –ஒருமுறை படப்பிடிப்புக்கு நான் காஷ்மீர் சென்றிருந்தபோது, அங்கே என்னை சந்தித்த ராணுவ வீரர் ஒருவர் ,தமிழகத்தில் இருந்து ராணுவத்துக்கு அதிக வீரர்கள் வருவதில்லையே ஏன் ?என என்னிடம் கேட்டார்.
அப்போது ’ காலம் வரும்’என அவருக்கு பதில் சொன்னேன் –அந்த காலம் இப்போதுதான் மலர்ந்திருக்கிறது.
எனக்கு 20 வயதாக இருந்தபோது, ராணுவத்தில் சேருவதற்கு ஆசைப்பட்டேன் –எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை- எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்பது எனக்கு தெரியாது –இன்று நான் உயிருடன் இருந்திருப்பேனா என்பது தெரியாது –ஆனால் நிம்மதியாக இருந்திருப்பேன்
ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் தமிழக இளைஞர்கள் சேர, சோழ, பாண்டிய நாட்டை சேர்ந்தவர்கள்- ஆதலால்,வீரத்திலும், தீரத்திலும் ,துணிவிலும் யாருக்கும் பின் தங்கியவர்கள் அல்லர் என்பதை காண்பிக்க வேண்டும்- வெற்றி வாகை சூடுவதற்கு உரியவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்
வெற்றி பெறுங்கள் –நாட்டுக்கு பெருமையை ஏற்படுத்துங்கள் –தமிழகத்துக்கு உயர்வு தேடித்தாருங்கள்; என எம்.ஜி.ஆர் அந்த விழாவில் .தெரிவித்தார்.