கவிஞர்கள் வாலி, வைரமுத்துவை வைத்து ரஜினி போட்ட திட்டம் !

ரஜினிக்காக, வாலி ஒரு பாடலை எழுதி இருந்தார்.
அதனை கேட்காமல் பாதியிலேயே ரஜினி வெளியேறிய ஒரு சம்பவம்.

தமிழ் சினிமாவில் 5 தலைமுறை உச்ச நடிகர்களுகளுக்கு, பாடல் எழுதியவர் –‘ வாலிப கவிஞர் ‘வாலி.


ரஜினிகாந்த ஹீரோவாக நடித்து, அவரே தயாரித்த
பாபா படத்தில் வாலி ஒரு பாடல் எழுதி இருந்தார்.

அந்தப் பாடலுடன் ரிகார்டிங் ஸ்டூடியோவுக்கு போனார்.அங்கே ரஜினிகாந்தும் இருந்தார். ரஜினி, வாலியை வரவேற்று உட்கார வைக்கிறார்.

ரஜினியிடம் வாலி, ‘பாபா படத்துக்கு நான் எழுதிய பாட்டை இப்போ வாசிக்கிறேன் -பாட்டு படிப்பேன் .ஆனா வாசிச்சு முடிக்கிற வரைக்கும் நீ எந்திரிக்க கூடாது’. என்ற உத்தரவிட்டார்.

ரஜினி , ஓகே சொல்லி விட்டார்.

வாலி பாட்டை வாசிக்க ஆரம்பிக்கிறார் .முதல் வரியைத்தான் வாசிக்கிறார். அப்போது ஒருத்தர் இடை புகுந்து , ரஜினி காதில் ஏதோ சொல்கிறார்.

உடனே ரஜினி,’ அண்ணே ஒரு நிமிஷம் ‘என்று சொல்லி எழுந்திருக்கிறார். வாலிக்கு கோபம்.

‘ இப்பத்தானே சொன்னேன் ..முழுசா பாட்ட படிக்கிற வரைக்கும் எந்திரிக்க கூடாதுன்னு’, என்று வாலி சொல்ல,அதனை காதில் வாங்காமல் ரஜினிகாந்த் வெளியே போகிறார். அங்கே வைரமுத்து பாடலோடு வந்திருக்கிறார்.
வைரமுத்துவை வரவேற்புரையில் உட்கார வைத்துவிட்டு வாலியிடம் வந்த ரஜினி, ‘ அண்ணே ..சிங்கமும் புலியும் இப்போது சந்திக்க போகுது ‘என்று சொல்லி சிரித்தார்.

‘வைரமுத்து வந்திருக்காரா? என்று கேட்ட வாலி, மேலும் தொடர்ந்தார்.

‘சிங்கமும் புலியும் சந்திக்க போகுதுன்னுச் சொன்னே, நாங்க ரெண்டு பேர்ல யாருயா சிங்கம் என்று வாலி கேட்க, ரஜினி விக்கித்து போனார்.அவரிடம் இருந்து பதில் இல்லை.

ரஜினியை சிக்கலுக்கு ஆளாக்க விரும்பாத, வாலி ‘நான் தான் சிங்கம்’என தனது பாணியில் சொன்னார்.,. ஏன் தெரியுமா ? தாடி வச்சிருக்கேனே’ என்று சொல்ல
ரிகார்டிங் தியேட்டரில் சிரிப்பு மழை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *