எம்.ஜி.ஆர். ன் வெற்றி ரகசியம்.

சென்னை ராணி அண்ணாநகரில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் திறப்பு விழா 1983- ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், இதனை திறந்து வைத்துபேசினார்.

அதன் ஒரு பகுதி இது :

“குழந்தைகள் கல்வியோடு ,நல்ல உடல் நலத்தோடும் இருக்க வேண்டும்-இதுதான் முக்கியம் –வசதி இருக்கிறதே, படித்துத்தான் சம்பாதிக்க வேண்டுமா? என்று நினைக்கக்கூடாது –அதுபோல்,ஏழைகள் ‘நாம் உழைக்கத்தான் பிறந்தோமா ? என்று எண்ணக்கூடாது – யார் , எந்த பதவிக்கு போவார் என்பது நிச்சயமில்லை –
மகாத்மா ஆவார் என அவரை பெற்றவர்கள் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் –அண்ணாவை பெற்றவர்களும் அப்படித்தான்-பெரியாரை பெற்றவர்களும் அப்படித்தான் –இந்த குழந்தை இப்படித்தான் வரும் என்று சொல்ல முடியாது –இப்படி எல்லாம் மனதில் கொண்டு கல்வி கற்று சுத்தமாக இருக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு ஒன்று சொல்வேன் –தினமும் தாய்- தந்தையை வணங்கி விட்டு செல்லுங்கள் –அதைவிட சக்தி தரும் கடவுள் வேறு இல்லை.

தாயையும்,தந்தையையும் வணங்கி விட்டு நீங்கள் சென்றால், நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள்
எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்றால் , என் தாய்க்கு பிறகு அண்ணா –அதற்கு பிறகு நீங்கள்- உங்கள் ஆதரவில்தான் , நான், இந்த நிலையில் இருக்கிறேன் ‘என்று உருக்கமாக பேசினார், எம்.ஜி.ஆர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *