“மோனிகா பெலூச்சி இறங்கி வந்தாச்சி….
கடலே கொந்தளிக்கும் சுனாமி உண்டாச்சி… “
என்ற வரிகள் இடம்பெற்று உள்ள பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
கூலி படத்தில் இடம்பெற்று உள்ள இந்தப் பாடலை விஷ்ணு எடவன் எழுதி உள்ளார். அனிருத், சுபாஷினி பாடியிருக்கின்றனர். படத்தில் பூஜா ஹெக்டே நடனம் ஆடியுள்ளார்.
மிகவும் பிரபலமாகிவிட்ட பாடலில் இடம் பெற்றுள்ள மோனிகா பெலுச்சி யார் என்ற தேடுதல் அதிகமாகி இருக்கின்றது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த மோனிகா பெலுச்சி
பிரபல திரைக்கலைஞர். இப்போது 60 வயதாகும் மோனிகா பெலூச்சி, ஐரோப்பியத் திரையுலகிலும் ஹாலிவுட் திரையுலகிலும் துணிச்சலான பாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலம் பிரபலமானவர்.
The Matrix Reloaded, The Matrix Revolutions, The Passion of the Christ, Spectre, Irreversible உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர்.
இவரை மையமாக வைத்தே இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை மோனிகா பெலுச்சியும் கேட்டு மகிழ்ந்ததாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். பெலூச்சிக்கு இன்ஷ்டாவில் 60 லட்சம் பின் தொடர்கிறவர்கள் உள்ளனர்.
சரி, மோனிகா பெலுச்சியின் பெயர் பாடலில் இடம் பெற்றது எப்படி என்று லோகேஷ் கனகராஜிடம் கேட்டதற்கு அவர், நானும் அனிருத்தும் பெலுச்சியின் ரசிகர்கர்கள் என்று கூறியுள்ளார்.
மோனிகா பாடலைக் கேட்ட் ரசிகர்கள் பலரும் பெலூச்சியை இன்ஸ்டாவில் பின்பற்ற ஆரம்பித்து உள்ளனர்.
……