Skip to content

திமுக எம்பி ஆகிறார் எழுத்தாளர் சல்மா.

கவிஞர் நா. முத்துக்குமார் பிறந்தநாளில் இசை நிகழ்ச்சி.

சூரி நடித்த ‘மாமன்’ படத்தின் வசூல் ரூ.25 கோடியை கடந்திருப்பதால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. கடந்த 16 ஆம் தேதி வெளியான இந்தபடம் முதல் சில நாட்கள் குறைவாகவே வசூலித்தது. ஆனால், நாளுக்கு நாள் பி மற்றும் சி சென்டர்களில் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. திரையரங்கள் நிரம்பி வழிந்தன. ஹவுஸ்

ரூ 25 கோடி வசூல், மாமன் படம்.

சூரி நடித்த ‘மாமன்’ படத்தின் வசூல் ரூ.25 கோடியை கடந்திருப்பதால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. கடந்த 16 ஆம் தேதி வெளியான இந்தபடம் முதல் சில நாட்கள் குறைவாகவே வசூலித்தது. ஆனால், நாளுக்கு நாள் பி மற்றும் சி சென்டர்களில் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. திரையரங்கள் நிரம்பி வழிந்தன. ஹவுஸ்

விஜய் படத்தில் நடிக்க ரேவதி சம்மதம்.

அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய், கடைசியாக நடித்து வரும் படம் ‘ஜன நாயகன்’.ஹெச். வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மாமிதா பைஜூ, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளது. இந்த படத்தில் நடிகை ரேவதியும் இணைகிறார். அவர் விஜயின் தாயாராக நடிக்கிறார். ரேவதி இதற்கு முன்பு 2002 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து

தங்கைக்கு தாயாக நடிக்கும் சிம்ரன்.

ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் நடிக்க வந்து பிரபலமாகிவிட்டால், அவர்கள் வீட்டில் இருந்து மேலும் சிலர் வெள்ளித்திரைக்கு வருவது வாடிக்கை. சிவாஜி மகன் பிரபு, கமல் மகள் ஸ்ருதிஹாசன், கார்த்திக் மகன் கௌதம், சிவாஜி பேரன் விக்ரம் பிரபு, சிவகுமார் மகன்கள் என இந்த பட்டியல் அனுமார் வால் போல் நீளும். நக்மாவின் சகோதரி ஜோதிகா, சிம்ரனின் தங்கை மோனல் ஆகியோரும் இதில் அடங்குவர். அப்பா மகன், அக்கா தங்கை

சன் பிக்சர்ஸ் படத்தில் தீபிகா படுகோன்.

நம்ம ஊர் டைரக்டர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார். பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள ‘ஸ்பிரிட்’படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம், செய்யப்பட்டிருந்தார். சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் இந்த படத்துக்கு தீபிகாவுக்கு ரூ.20 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்தது. டைரக்டருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ‘ஸ்பிரிட்’படத்தில் இருந்து தீபிகா விலகினார். அந்த கால்ஷீட்டை அவர் அட்லி படத்துக்கு

திருப்பதிக்கு ரூ 80 கோடி சொத்துகளை கொடுத்தார் நடிகை காஞ்சனா.

வாட்ஸ் அப்ல் பரவும் தகவல் ….. “விமான பணிப்பெண்ணாக இருந்த என்னை இயக்குனர் ஸ்ரீதர் அவர் இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். என்னை தற்போது வரை பலருக்கும் காஞ்சனா என்று தான் தெரியும். ஆனால் என்னுடைய உண்மையான பெயர் வசுந்தரா தேவி. நடிகை வைஜெந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக்கொண்டு இருந்ததால் எனது பெயரை காஞ்சனா என ஸ்ரீதர் மாற்றினார். 1964-ல் அந்த படம்

தமிழுக்கு வருகிறார் பிரவீனா டாண்டன்

பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ரவீனா தாண்டன், இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். முதல் படம் -அர்ஜுன் ஜோடியாக ‘சாது. இதனை தொடர்ந்து , 2001 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘ஆளவந்தான்’ படத்தில் கமலுடன் நடித்தார் 24 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் ‘லாயர்’படத்தில் நடிக்க ரவீனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர்

பிரபாஸ் படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகியதன் பின்ணனி.

‘கபீர்சிங்’ ‘அனிமல்’ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த சந்தீஷ் ரெட்டி வாங்கா இயக்கும் புதிய படம் ‘ஸ்பிரிட்’. பிரபாஸ் ,ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன், ஒப்பந்தம் செய்யப்பட்டார். ‘ஸ்பிரிட்’படத்தில் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்டார், தீபிகா. இது – பான் இந்தியா தயாரிப்பு என்பதால், தீபிகா கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார். செப்டம்பர் மாதம் ‘ஷுட்டிங்’ தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்தில்

துணை முதல்வர் படத்தில் சிம்பு.

தெலுங்கு சினிமா உலகில் , தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பவன் கல்யாண். அவர்கள் ‘சக்தி’யை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனசேனா எனும் கட்சியை ஆரம்பித்தார். இப்போது ,அவர்-ஆந்திர மாநில துணை முதலமைச்சராக இருக்கிறார்.உயர் பதவி கிடைத்ததால், கொஞ்சகாலம் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தார். பவன், நடிப்பில் உருவான பல படங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன.தயாரிப்பாளர்கள் நலன் கருதி அந்த படங்களை தூசி தட்டி மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதில்