பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய், இலவச பேருந்து வசதி… 200 யூனிட் இலவச மின்சாரம்… காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, அரசியல் கட்சிகள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் பாஜக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலத் தலைவர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதற்கு ’சர்வ ஜனங்கட சாந்திய தோட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து சமூகத்தினருக்கும் அமைதியான பூந்தோட்டம் என்று அர்த்தமாம்.

இதில் குருஹ ஜோதி, குருஹ லக்‌ஷ்மி, அன்ன பாக்யா, யுவ நிதி, சக்தி என ஐந்து உத்தரவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை போல் காணப்படுகிறது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை

ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3,000 ரூபாய். அதுவே வேலையில்லா டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும்

KSRTC அல்லது BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதி

2006ஆம் ஆண்டிற்கு பின்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நீட்டிக்க பரிசீலனை செய்யப்படும்…. உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *